ஒரு கணவன் மனைவியை எப்படியெல்லாம் நடத்த வேண்டும்

ஒரு கணவன் மனைவியை எப்படியெல்லாம் நடத்த வேண்டும் எப்படியெல்லாம் நடத்தக்கூடாது?





முக்கியமாக மனைவியையும்அவரின் வீட்டாரையும் மரியாதை தந்து மதிக்க வேண்டும்.
கணவன் மனைவி சண்டை வரும் சந்தர்ப்பத்தில் மனைவியின் வீட்டாரை இழுக்கக் இழுப்பதை முற்றாக தவிருங்கள் .
மனைவியின் உடல் மற்றும் அழகு குறைகளை அடிக்கடி குத்திக் காட்டி பேசக்கூடாது.
கணவனான நீங்கள் தரக்குறைவான வார்த்தை பிரயோகத்தை பாவிக்காதீர்கள்.

நீங்கள் மனைவியுடன் வெளியே செல்லும் போது சிடுமூஞ்சியாக இருக்காதீங்க இயல்பாக அவளை கூட்டிப் செல்லுங்கள்.
உங்கள் பெற்றோரிடம் உங்கள் துனையை பற்றிப் பெருமையாகக் பேசுங்கள் .
நீங்கள் வெளியில் இருக்கும் போது தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு உனக்கு என்ன வாங்கி வரணும். சாப்டியா என விசாரிக்க மறக்காதீர்கள். 
மனைவி ஆசைப்படுவதை நீங்கள் உணர்ந்து உங்களால் முடியுமான வரை அவற்றை வாங்கிக் கொடுங்கள்.
விடுமுறை நாட்களில் அடிக்கடி வெளியே கூட்டிச் செல்ல மறக்காதீர்கள்  


   
உங்கள் மனைவியின் சமையலை குறை சொல்லாமல் பக்குவமாக எடுத்து புரிய வைக்க வேண்டும்.
உங்களுக்கு முடியும் நேரங்களில் நீங்க சமையல் செய்து உங்க மனைவியை அசத்தணும்.
மனைவியை அடிக்கடி அன்பாக ஆறுதலாக தோல்களில் தடவி பேசுங்கள்.
உங்களால் முடியும் போதெல்லாம் கொஞ்சம் பணம் கொடுத்து வையுங்கள்.
மறக்காமல் மனைவியை அடிக்கடி அவள் பிறந்த வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்.
மனைவியின் உடல் நிலை சரியில்லை என்றால் நீங்கள் கட்டாயம் லீவு எடுத்து அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுங்கள்.
உங்கள் வீட்டில் மனைவி எடுக்கும் முடிவுகளை நீங்கள் மறுக்காதீர்கள். அது தவறான முடிவாக இருந்தால் இதமாக பேசி புரிய வையுங்கள்.
அடிக்கடி மனைவியின் நல்ல செயல்களைப் மனம்விட்டு பாராட்டுங்கள்.


மனைவியாக நீ எனக்கு கிடைத்தது நான் செய்த அதிர்ஸ்டம் என்று கூறுங்கள்.
உங்கள் அலுவலக விடயங்களை இரவில் மனைவியுடன் கட்டாயமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
மனைவியின் நீண்ட கால ஆசைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைக்க மறக்காதீர்கள் 
அவள் மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கான உரிய மரியாதையை கொடுங்கள்.


முக்கியமாக அவளிற்கு பிடிக்காத விஷயங்களை தவிர்த்து விடுங்கள்.
 திடீர் என நண்பர்களுடன் வீட்டில் வந்து நிக்காதீங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copyright © 2021 Wikisolai. All Right Reserved