ஒற்றை தலைவலி இலகுவில் குணமாக சில இயற்கை மருத்துவ முறைகள்

ஒற்றை தலைவலி இலகுவில் குணமாக சில இயற்கை மருத்துவ முறைகள்..

ஒற்றைத் தலைவலி அநேகமானவர்களுக்கு பரம்பரையாகவே இருக்கும். நாம் பணி புரியும் இடங்களில் இருக்கும் பிரச்சனைகள் - பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் காணப்படும் பிரச்சனைகளால் கூடுதலான ஒற்றை தலைவலி ஏற்படும். 

ஒற்றைத் தலைவலியானது பரம்பரை பரம்பரையாகவும், உணவு ரீதியாகவும் தோன்றுகிறது. பெண்களே கூடியளவு ஒற்றை தலைவலியால் அவதிப்படுகின்றார்கள். நமக்கு ஏற் படும் ஒற்றைத் தலைவலியில் கண் நரம்புகளில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி - பக்கவாத ஒற்றைத் தலைவலி மற்றும் முக நரம்பு ஒற்றைத் தலைவலி போன்று வகைப்படுத்தலாம்.

ஒற்றை தலைவலி ஏற்பட்டவுடன் அநேகமானவர்களுக்கு வாந்தி ஏற்படும்.மன பதற்றம் - கூடுதலான களைப்பு - பசி ஏற்படாமை ஆகிய பிரச்சனைகள் தோன்றும். ஒற்றை தலைவலியால் நம் மூக்கிலிருந்து நீர் சொட்டும். சிலர் கூடுதலான மன சோர்வுடன்இருப்பார்கள். குறைந்தளவு தலைவலியுடன் தொடங்கி அதிக தலைவலியாக மாறும். அநேகமானவருக்கு 72 மணித்தியால நேரம் கூட ஒற்றை தலைவலி விடாமல் தொடரும்.  
 நல்லெண்ணெய் நூறு மில்லியுடன் ஐந்து மில்லி குப்பைமேனி சாறுடன் சேர்த்து சூடாக்கி வடிகட்டி 2 நாட்களுக்கு ஒரு தடவை தலைக்கு பூசி குளித்து வந்தால் ஒற்றைத்தலைவலி சரியாகும்.

நல்லெண்ணெய் 4/1 கருஞ்சீரகப்பொடி 50 g - நெய் 10 g - எலுமிச்சை சாறு 10 மில்லி - வெற்றிலைச்சாறு 10 மில்லி சேர்த்து சூடாக்கி அதை வடித்து வைத்து கொண்டு ஒரு நாள் பின் ஒரு நாள் தலைக்கு பூசி குளித்து வந்தால் ஒற்றை தலைவலி சரியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copyright © 2021 Wikisolai. All Right Reserved