ஆண்களே..! அந்தரங்க பகுதியில் அதிகம் வியர்க்கிறதா..? - இதோ, அதை சமாளிக்கு வழிகள் சில..!

ஆண்களே..! அந்தரங்க பகுதியில் அதிகம் வியர்க்கிறதா..? - இதோ, அதை சமாளிக்கு வழிகள் சில..!



பொதுவாக வியர்த்தாலே எரிச்சலாக இருக்கும். அதிலும் அந்தரங்க பகுதியைச் சுற்றி அதிகமாக வியர்க்கும் போது, அது எரிச்சலுடன், மிகுந்த தர்ம சங்கடத்தையும் உண்டாக்கும். குறிப்பாக இந்த பகுதியில் சந்திக்கும் வியர்வை பிரச்சனையைக் குறித்து மற்றவர்களுடன் பேசுவதற்கு சங்கடப்படுவோம். ஆனால் ஒருவரது அந்தரங்க பகுதியில் வியர்வை அதிகமாக வெளியேறினால், அது துர்நாற்றத்தை உண்டாக்குவதோடு, அரிப்பு மற்றும் சில சமயங்களில் தீவிர அழற்சியை உண்டாக்கும்.



அந்தரங்க பகுதியில் வியர்ப்பதற்கு பின் பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையான ஒன்று போதுமான காற்றோட்டம் இல்லாதது. அந்தரங்க பகுதியில் சந்திக்கும் வியர்வை பிரச்சனையை கண்டு கொள்ளாவிட்டுவிட்டால், பின் அந்த இடத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி பெருகி பல சரும தொற்றுக்களால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.


உடுத்தும் உடை (Dressing)


இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முழு முதல் காரணம் நீங்கள் உடுத்தும் உடை தான் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். கற்றோட்டமான உடைகளை அணிவதன் மூலம் இந்த பிரச்சனயை சரி செய்யலாம். காட்டன் துணிகளை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.


பவுடர்கள் (Talcum Powders)



குளித்து முடித்த பின்பு அந்த இடத்தில் துளி ஈரம் இல்லாத அளவுக்கு நன்கு துடைத்து விட வேண்டும். பிறகு அந்த இடத்தில் முகத்திற்கு பூசும் டால்கம் பவுடரை பயன்படுத்தினால் வியர்வை கட்டுக்குள் வரும்.


பூஞ்சை எதிர்ப்பு பவுடர்கள் (Anti-fungal powders)


வியர்வையால் துர்நாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இப்படியான பிரச்சனையில் இருப்பவர்கள். மருத்துவரை சந்தித்து பூஞ்சை எதிர்ப்பு பவுடர்களை வாங்கு பயன்படுத்தினால் வியர்வை மற்றும் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் அறவே ஒழிந்து விடும்.


ஆன்டி-பாக்டிரியல் வாஷ் (Anti-Bacterial wash)



சமீப காலமாக ஆன்டி-பாக்டீரியல்வாஷிங் லிக்விட்கள் கடைகளில் அதிகம் கிடைக்கின்றன. சாதரணமாக பயன்படுத்தும் சோப்புகளை விட இந்த வகை ஆன்டி-பாக்டீரியல் வாஷ்களை பயன்படுத்தி தொடை இடுக்கு மற்றும் அந்தரங்க பகுதியை சுற்றி தேய்த்து குளித்தால் உடனடியாக பலன்கள் கிடைக்கும்.


உள்ளாடையில் கவனம் ( Inner Wear )


அணியும் உள்ளாடையில் கவனம் அவசியம். அந்தரங்க பகுதியை 

இறுக்கமாக அழுத்திக்கொண்டிருப்பது போன்ற உள்ளாடைகளை தவிர்த்து விடுங்கள். மேலும், வெளியில் செல்லும் நேரம் தவிர வீட்டில் இருக்கும் போது உள்ளாடைகளை தவிர்த்து விடுதல் சிறப்பு. இரவு நேரங்களில் கட்டாயம் உள்ளாடையை கழட்டி விடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், ஒரே உள்ளாடையை இரண்டு அல்லது அதற்கு மேலான நாட்களுக்கு பயன்படுத்துவது உங்கள் உடல் நலனுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் வேட்டு.



இயற்கை வைத்தியம் ( Natural Remedy )


அந்தரங்க பகுதியில் அதிக வியர்வை பிரச்சனை இருந்தால் மூணு டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, சுத்தமான காட்டன் துணியை அந்நீரில் நனைத்து, அந்தரங்க பகுதியைச் சுற்றி மிருதுவாக ஒத்தி எடுங்கள். இதனால் அந்தரங்க பகுதியில் வியர்வையால் பாக்டீரியாக்கள் பெருகுவது தடுக்கப்பட்டு சுத்தமாக வும், துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copyright © 2021 Wikisolai. All Right Reserved