உங்களுக்கு மூலநோய் காணப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் முறைகள்

உங்களுக்கு மூலநோய் காணப்படுகிறது!! என்பதை அறிந்து கொள்ளும் முறைகள்..



ஒருவருக்கு மூலநோய் காணப்பட்டால் வெளிப்படும் அறிகுறிகள். 

மலம் கழிக்கும் போது இரத்தம் வருதல். இப்படியான அறிகுறியை அவதானித்த உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் 

ஆசனவாய் பகுதியை தொடும் போது அந்த இடத்தில் வீக்கம் உண்டாகியிருப்பதை அறிந்தால் மூலநோய் இருக்கின்றது என்பதாகும்.

மலம் கழித்த பின்னர் நீங்கள் ரிலாக்ஸ்சாக இருக்கவில்லை என்றால் இ துவும் மூலநோய்க்கான ஒரு அறிகுறி ஆகும்.

முக்கியமாக ஆசன வாயில் சுற்றி தங்கமுடியாத அரிப்பு இருந்தால் , இது மூல நோய் இருக்கின்றது என்பதற்கான முக்கியமான அறிகுறிகலிள் ஒன்றாகும்.

மலம் கழிக்கும் சமயம் , சளியும் சேர்ந்து வெளியேறினால் அதுவும் மூலநோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.

மலம்கழிக்க முடியாது கழிவறையில் அதிக நேரம் இருந்து மலம் கழிக்க முயற்சி செய்தல் ஆசன வாயில் இருக்கும் நரம்புகள் சேதமடைந்து மூல நோய் வரும் .

மலச்சிக்கலால் நமது குடலில் மலம் சில நாட்கள் தேங்கி, ஒரு சந்தர்ப்பத்தில் மலத்தை வெளியேற்றும் போது, இதனால் ஆசன வாயில் இருக்கும் நரம்புகள் சேதமடைந்து மூலநோய் உண்டாகும்.

வயிற்றுப் போக்கால் (Stomach upset) கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மலம் கழிக்கும் போது ஆசனவாயில் இருக்கும் நரம்புகள் பாதிப்படைந்து ,மூலநோய் வரும் வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copyright © 2021 Wikisolai. All Right Reserved