இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எனினும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருவதால் தடுப்பூசி செலுத்துவது தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஃபைசர் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட உள்ள அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மருத்துவர்களின் பரிந்துரைக்குப் பின் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய சுகாதார சேவை பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தயாரித்து வருகிறது.
மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்க 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக இங்கிலாந்து சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக