உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்து சித்ரவதை செய்த காரணங்களுக்காக மொரதாபாத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஐபிசியின் 375வது பிரிவு, படி 15 வயதுக்கு மேல் உள்ள பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வு என்று கருதப்படாது எனத் தெரிவித்தார். 2013ஆம் ஆண்டு குற்றவியல் திருத்தச் சட்டத்தின்படி, உறவுக்கு ஒப்புக்கொள்ளுதலுக்கான வயது வரம்பு 15 லிருந்து 18ஆக உயர்த்தப்பட்டது..
இருப்பினும் 15 வயதுடைய அல்லது அதற்கு மேல் உள்ள பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேராது என்ற சட்டம் திருத்தப்படாததால் கணவன் மனைவியுடன் கட்டாய உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வு வகைக்குள் வராது என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மனுதாரரின் மனைவி வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறாகக் கட்டாயப்படுத்தி உடல் உறவு வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மனுதாரர் மனைவியை உறவு வைத்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தவில்லை என தெரிவித்தார். இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
அண்மையில் மற்றொரு வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் திருமணத்திற்குப் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் பாலியல் உறவு கற்பழிப்பு பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தது. மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பை மேற்கோள் காட்டி பாலியல் பலாத்கார, குற்றச்சாட்டில் குற்றவாளியின் மேல்முறையீட்டில் விசாரிக்கப்பட்ட தீர்ப்பில் உயர் நீதிமன்றம் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக