யூடியூப் சேனலை முடக்கினால்... 100 பேருடன் ‘அதுக்கு’ தயார்: ரவுடி பேபி சூர்யா ‘அழைப்பு’ எச்சரிக்கை
மதுரையில் டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக டிக்டாக் பிரபலங்கள் சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மதுரை சுப்பிரமணிய புரத்தை சேர்ந்த டிக்டாக் பிரபலமான சிக்கந்தர் என்பவரை, மற்றொரு டிக்டாக் பிரபலமான சூர்யா தேவி என்பவர் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி அவரது வீட்டு வாசலில் வைத்து செருப்பால் அடித்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். அந்த விவகாரத்தில், கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் சிக்கந்தர் அளித்த புகாரின் அடிப்படையில், சூர்யா தேவி மற்றும் அவருடன் வந்த ஆண் நண்பர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கந்தர் அளித்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில் தாமதமாகி வருவதாக கூறி, தனது மீசையை எடுக்க போவதாக கூறிய சிக்கந்தர், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். இந்த விவகாரங்கள் ஒருபுறம் இருக்க, திருச்சி மணப்பாறையில் உள்ள சூர்யா தேவி நேற்றைய தினம், தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அது குறித்தும் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Video 👇
இந்நிலையில், இன்று மதுரை ஜெய்ஹிந்த் புரம் காவல் நிலையம் வந்த சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா இருவரும், சூர்யா தேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். சூர்யா தேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல் ஆணையர் மற்றும் முதலமைச்சருக்கு புகார் அளிக்க உள்ளதாகவும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
என் மேல விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன்... என்பதோடு அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரவுடி பேபி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை காந்தி நகரை சேர்ந்த டிக்டாக் புகழ் சூர்யாதேவி(35), ரவுடிபேபி சூர்யாவின் ஆண் நண்பரான மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தரை செருப்பால் அடிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வழக்கில் மதுரை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தான், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மதுரை கமிஷனருக்கு சூர்யா தேவி வீடியோ அனுப்பினார். கமிஷனர் உத்தரவின் பேரில், போலீசார் மணப்பாறையில் உள்ள சூர்யாதேவி வீட்டுக்கு வந்த போது, அவர் மின் விசிறியில் தூக்கு கயிறை மாட்டி வைத்து விட்டு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். போலீசார் அவருக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றனர். இப்போது ரவுடி பேபி சூர்யாவும் தீக்குளிப்பேன் என தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக